சுமார் மூன்று கோடி செலவில் ஊர்காவற்துறையில் நிர்மாணிக்கப்பட்ட வணிகக் கப்பற்றுறைச் செயலக உப அலுவலக கட்டடத் தொகுதி நாளை புதன்கிழமை கொள்கலன்கள...
சுமார் மூன்று கோடி செலவில் ஊர்காவற்துறையில் நிர்மாணிக்கப்பட்ட வணிகக் கப்பற்றுறைச் செயலக உப அலுவலக கட்டடத் தொகுதி நாளை புதன்கிழமை கொள்கலன்கள் முனையங்கள், துறைமுக வளங்கள் வசதிகள் மற்றும் இயந்திர படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜெயந்த சமரவீர அவர்களின் பங்குபற்றுதலுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்களால் காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் நிதியுதவியில் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.