கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) மற்றும் கிரீடத்தை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு இன்று புதன்கிழமை பாராளுமன்ற ...
கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) மற்றும் கிரீடத்தை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு இன்று புதன்கிழமை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் வழங்கினார்.
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேக்கர அவர்களின் வழிகாட்டுதலுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) இலங்கை உள்ள மறை மாவட்ட ஆயர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.