யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இருபாலை கிழக்கு மற்றும் இருபாலை தெற்கு பகுதிகளான ஜே 257, ஜே 258 கிராம உத்தியோகத்தர் ...
யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இருபாலை கிழக்கு மற்றும் இருபாலை தெற்கு பகுதிகளான ஜே 257, ஜே 258 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இருபலை தெற்கு பகுதியால் 8 குடும்பங்களை சேர்ந்த 26 நபர்கள் கிரம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு இருபாலை கிழக்கு பகுதியில் 72 குடும்பங்களை சேர்ந்த 252 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ள அதே வேளை பல வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியில் உள்ள வெள்ள வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .