உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் வருடம் தொடக்கம் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கர...
உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் வருடம் தொடக்கம் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வெண்ணெய்க்கான (மாஜரின்) இதுவரை காணப்பட்ட 200 ரூபா வரி அரசாங்கத்தினால் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதுடன், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என்று என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.