கேகாலையை சேர்ந்த கொரோனாவுக்கு ஆயுர்வேத பாணி மருந்து தயாரித்ததாக கூறிய தம்மிக பண்டாரா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை ஆளும் கட்...
கேகாலையை சேர்ந்த கொரோனாவுக்கு ஆயுர்வேத பாணி மருந்து தயாரித்ததாக கூறிய தம்மிக பண்டாரா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல இலங்கை பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கும் வழங்கியதுடன் அவர்கள் அதனை ருசித்துபார்த்தனர்.
அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் பல அமைச்சர்கள் இந்த மருந்தை ருசிபார்த்தனர்.
இது தொடர்பில் தம்மிக பண்டாரா கூறுகையில், இதனை பருகுவதன் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
இதேவேளை இவர் அறிவித்தல் செய்து வீட்டில் வைத்து 5000 பாணி மருந்து போத்தல்களை மக்களுக்கு வழங்கியிருந்தார். இதில் இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்கள் என வாங்கிசென்றிருந்தனர்.