கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் வழக்கு ஆவண காப்பக அறை மற்றும் நீதிமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவில்லை என அற...
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் வழக்கு ஆவண காப்பக அறை மற்றும் நீதிமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட சேதமதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீர்பரவல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 3 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.