புரேவி சூறாவளி சமயத்தில் சாவகச்சேரியில் கொள்ளை - இருவர் கைது

புரேவி சூறாவளி சமயத்தில் சாவகச்சேரியில் கொள்ளை - இருவர் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை ...


சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

அத்துடன், 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள் ஐவர் இந்தக் கைவரிசையைக் காண்பித்திருந்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐவர், வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டன என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களின் விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இன்று வரையான விசாரணையில் கொள்ளையர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேக நபர்களின் உடமையிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3294,lanka,8589,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,575,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: புரேவி சூறாவளி சமயத்தில் சாவகச்சேரியில் கொள்ளை - இருவர் கைது
புரேவி சூறாவளி சமயத்தில் சாவகச்சேரியில் கொள்ளை - இருவர் கைது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNols9HasTELkqWom_RrPH2iKPAvt6o4NumoYjuKJwBhiaQKWIsX_yHForVgRlxebyB_fXNPneajcveehjzxIXUvp2CmVe_L-We2s4xJvKeIteEe6QsHpXnG8RnD33VZCEoLXzbHG6nrI/s320/IMG-b09370c6c56d5d14da8939cd135f8e34-V.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNols9HasTELkqWom_RrPH2iKPAvt6o4NumoYjuKJwBhiaQKWIsX_yHForVgRlxebyB_fXNPneajcveehjzxIXUvp2CmVe_L-We2s4xJvKeIteEe6QsHpXnG8RnD33VZCEoLXzbHG6nrI/s72-c/IMG-b09370c6c56d5d14da8939cd135f8e34-V.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/12/blog-post_82.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/12/blog-post_82.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content