எதிர்வரும் 18ம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதென அந்த சங்கத்தின் செயலாளர்...
எதிர்வரும் 18ம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதென அந்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைகள் கிடைக்காமை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிரச்சினை குறித்து அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.