யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன்...
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் இணைப்பாளர்கள் , வட மாகாண இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சின் இணைப்பாளர் குலேந்திரன் சிவராம் , யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத்தினர்களும் கலந்துகொண்டனர்.
யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் பின்வருமாறு
தலைவர் நிதர்சன் கரவெட்டி
உப தலைவர் 01 துவாரகன் நல்லூர்
உபதலைவர் 02 தர்சன் உடுவில்
செயலாளர் கீர்த்தனா சாவகச்சேரி
உப செயலாளர் கஜன்
பொருளாளர் கிரேஸ் யாழ்ப்பாணம்
அமைப்பாளர் திவாகர் சன்டிலிப்பாய்
உப அமைப்பாளர் கோகுலன் ஊர்காவற்றுறை