சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் குழாய்க்கிணறு நீரை குடிக்கலாமா ?குடிக்க முடியாதா ? என சொல்வதில் சிக்கல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல்...
சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் குழாய்க்கிணறு நீரை குடிக்கலாமா ?குடிக்க முடியாதா ? என சொல்வதில் சிக்கல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல் குறித்த பகுதியில் உள்ள நீரினை குடிக்கலாமா? என சிவில் அமைப்பு பிரதிநிதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது சுன்னாகம் பகுதியில் உளள குடிநீரில் கழிவு ஓயில் தாக்கம் இருக்குதா? இல்லையா? என ஆய்வு செய்வதற்கு தம்மிடம் நிதி இல்லை எனவும் யாராவது முன்வந்து குறித்த பகுதியில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்வதற்கு நிதி அனுசரணை வழங்கினால் ஆய்வு செய்ய முடியும்.
தற்போது சுன்னாக பகுதிக் குடிநீரை பருக முடியுமா எனக் கேட்டால் அதனை சொல்வதில் சிக்கல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.