கொவிட் – 19 காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தையும் ம...
கொவிட் – 19 காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தையும் மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள அறநெறிப் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்து அறநெறிப் பாடசாலைகளினதும் செயற்பாடுகளை நாளை 17.01.2021 தொடக்கம் ஆரம்பிக்குமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நோய்த் தொற்றுப் பரம்பலின் தற்போதைய நிலைமை மற்றும் மீள ஏற்படக்கூடிய நிலைமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் மற்றும் உரிய தரப்பினரின் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டு, அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கான அனுமதியையும் அவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டு நடைமுறைக்கு அறநெறி நிர்வாகம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தி உதவுமாறு பிரதேச செயலாளர்களை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.