இந்தியாவிலிருந்து இன்று கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகளை நாளை ஆறு வைத்தியசாலைகளில் வைத்து ஏற்றப்படவுள்ளது. அடுத்...
இந்தியாவிலிருந்து இன்று கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகளை நாளை ஆறு வைத்தியசாலைகளில் வைத்து ஏற்றப்படவுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்குள் 5 இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர்
Dr.ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சமும் இல்லாது தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என அரசாங்கமும், சுகாதார அமைச்சும், பணியகமும் முழுமையான வாக்குறுதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய
01) கொழும்பு தேசிய வைத்தியசாலை,
02) ராகம வைத்தியசாலை,
03) களுபோவிலை வைத்தியசாலை,
04) அங்கொடை IDH வைத்தியசாலை,
05) ஹோமாகம வைத்தியசாலை,
06) முல்லேரியா வைத்தியசாலை என ஆறு வைத்தியசாலைகளில் நாளை தினம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.