யாழ் நகரின் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பிரபல திரையரங்கு சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பேணப்படாமையால் 14 நாள்களுக்கு தனிமைப...
யாழ் நகரின் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பிரபல திரையரங்கு சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பேணப்படாமையால் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மூடப்பட்ட திரையரங்கில் முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தமையே திரையரங்கு மூடப்பட்டமைக்கு காரணமென சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையிலே சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமையால் திரையரங்கு ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.