யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (27) சமர்ப்பிக்கப்படவுள்ளது. திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் த...
திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த இ.ஆர்னோல்ட் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனமையினால், பதவியிழந்தார். அதை தொடர்ந்து நடந்த புதிய முதல்வர் தெரிவில் வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.
இந்த நிலையில் வி.மணிவண்ணன் இன்று தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.
வி.மணிவண்ணன் தரப்பின் 9 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 1 உறுப்பினர், ஈ.பி.டி.பியின் 11 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வரவு செலவு திட்டத்தில் 21 வாக்குகள், மணிவண்ணன் தரப்பிற்கு நிச்சயம் கிடைக்கும்.
இந்த தரப்புக்களை தவிர, எதிரணியில் 23 வாக்குகள் உள்ளன. முதல்வர் தெரிவை போல, இம்முறையும் வேறு தரப்புக்கள் மறைமுக ஆதரவு வழங்கினால் அல்லது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தால் மாத்திரமே மணிவண்ணன் தரப்பு வெற்றிபெறும்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.