இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை விரைந்து திறப்பது தொடர்பில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதி...
இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை விரைந்து திறப்பது தொடர்பில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், யாழ் மாநகர முதல்வர் 
வி.மணிவண்ணன், இந்திய துணைத் தூதுவர், வடமாகண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் , வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், யாழ் மாநகர ஆணையாளர்  ஜெயசீலன், யாழ் அரசாங்க அதிபர் மகேசன் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.
 இதில் யாழ் மாநகர சபையினால் குறித்த கலாச்சார மையத்தை பராமரிக்க முடியாது என்றும் அதனால் அதனை மத்திய அரசின்  ஆளுகைக்கு எடுப்பது தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 
இதன்போது யாழ் மாநகர முதல்வர்  இதனை யாழ் மாநகர சபையினால் பராமரிக்க முடியும் என்றும் அது தொடர்பில் நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாகவும் கூறினார். குறித்த கலாச்சார மையத்தை நிர்வகிப்பதற்குரிய ஆளணியை விரைந்து உருவாக்கி தருமாறு மணிவண்ணனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
பின்னர் இதே போல கொழும்பில் உள்ள தாமரைத் தடாக கட்டட தொகுதி எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதையும் முதல்வரும் ஆணையாளரும் நேரில் சென்று ஆராய்ந்தனர்.


							    
							    
							    
							    
