மாஸ்டர் படம் வெளியாக முதலே படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது....
மாஸ்டர் படம் வெளியாக முதலே படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.
வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators கசிந்திருக்கும் காட்சிகளை யாரும் மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அப்படிப் பரப்பப்படுவது தெரிந்தால் report@blockxpiracy.com என்கிற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவியுங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
"மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!" என்று ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
'மாஸ்டர்' படக் காட்சிகள் எப்படிக் கசிந்தது, இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.