யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்தவாரம் மாத்தளைக்குச் சென்று திரும்பியதாகவும் அங்கு அவர் மரணச் சடங்கு ஒன்றுக்கு சென்று திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது.
அவருடைய தாயாருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாத்தளை சுகாதாரத் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களத்தினருக்கு இன்று வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக மாணவனுக்கு விசேடமாக இன்று பிசிஆர் பரிசோதனை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நல்லூரின் கச்சேரி - நல்லூர் வீதியில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தாகவும் அவருடன் நெருங்கிப்பழகியவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என மேலும் ஆறு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கேதீஸ்வரன்,
அதே வீதியில் அவர்கள் உணவருந்தச் செல்லும் உணவகம் உடனடியாக மூடப்பட்டு அதனை நிர்வகிப்பவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.