யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரே பொறுப்போற்க வேண்டுமென இராஜா...
கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன்
ஆகியோரே பொறுப்போற்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஹீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பேசும்போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ல முதல் தயாசிறி ஜெயசேகர ஒழுங்காக நடக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு ஹீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியை நடத்திய நிலையில், இந்தப் பேரணியின் நிறைவில் ஹீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொது நூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான பேரணி கோட்டையை சுற்றி ஏ-9 விதிச் சந்தியில் ஊடாக கேகேஎஸ் வீதியில் பயணித்து சத்திரச்சந்தியால் வைத்தியசாலை வீதியால் பயணித்து மகாத்மா காந்தி வீதியுடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பெருமளவில் மக்கள் மண்டபத்தில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு பரவாத கொரோனாவா மற்றவர்களால் பரவப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.