பொத்துவில் - பொலிகண்டி பேரணி இரண்டாம் நாள் ஆரம்பித்தது.

பொத்துவில் - பொலிகண்டி பேரணி இரண்டாம் நாள் ஆரம்பித்தது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி தற்போது காத்தான்குடி பகுதியை கடந்துள்ளது. காத்தான்குடியில் பெருமளவு முஸ்லிம் மக்களும் போராட்டத்தில...


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி தற்போது காத்தான்குடி பகுதியை கடந்துள்ளது. காத்தான்குடியில் பெருமளவு முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே? எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற கோசங்களை கலந்து கொண்டோர் எழுப்பினர்.

இன்றைய போராட்டத்தில் கோவிந்தம் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது கல்லடியை பேரணி நெருங்கி வருகிறது.

நேற்று போராட்டத்திற்கு இடையூறு விளைவித்த பாதுகாப்புத் தரப்பினர், இன்று பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு தாழங்குடாவில் இருந்து பேரணியின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள், இன மத அடையாளங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைகளிற்கு எதிராகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனத உரிமை மீறல் விவகாரங்களில் அழுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வலிறுத்தியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

நேற்று பொத்துவிலில் இருந்து போராட்டம் ஆரம்பித்தது. பல்வேறு தடைகள், அடைமழைக்கு மத்திிலும் ஆரம்பித்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் தரப்புக்கள் பங்கெடுத்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தம் கருணாகரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரன், மன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ், தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு பகுதிகளிலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்த முயன்ற போது, போராட்டக்காரர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட்டு முன்னேறினர்.

பல்வேறு இடங்களிலும் நீதிமன்ற தடை கட்டளைகளை பொலிசார் விநியோகித்தனர்.

கோவிந்தம் கருணாகரன், பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்ற தடை கட்டளைகளை பெற மறுத்து விட்டனர். களுவாஞ்சிக்குடி, கல்முனை பகுதி தடையுத்தரவுகளை பெற்று பேஸ்புக்கில் படமும் பகிர்ந்து விட்டதால், அந்த பகுதிகளில் இரா.சாணக்கியன் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. வாகனத்திலேயே இருந்து விட்டார்.

நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.

இன்று காலை 8.30 மணிக்கு போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது. காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடைகிறது.

தமிழ் நிலத்தின் இதயமான கொக்கிளாய், நாயாறு, மணலாறு, தென்னன்மரவடி பகுதிகளில் நீண்ட காலத்தின் பின்னர் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் போராட்டமொன்றில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பொத்துவில் - பொலிகண்டி பேரணி இரண்டாம் நாள் ஆரம்பித்தது.
பொத்துவில் - பொலிகண்டி பேரணி இரண்டாம் நாள் ஆரம்பித்தது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdS2BDOk2sP17BSsvSoTFVbtdy0hpjBRi98-X0garXA88OQg_WV3wOqWd32xOQG3wQCOStjfZnJmAzkfZ4RDoFOhrWT4BXTrHIj0OULcNCW3KpHIcyKWsOBZBFqKE-2E9z8JPJgWyxvnc/s320/FB_IMG_1612414547743.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdS2BDOk2sP17BSsvSoTFVbtdy0hpjBRi98-X0garXA88OQg_WV3wOqWd32xOQG3wQCOStjfZnJmAzkfZ4RDoFOhrWT4BXTrHIj0OULcNCW3KpHIcyKWsOBZBFqKE-2E9z8JPJgWyxvnc/s72-c/FB_IMG_1612414547743.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/02/blog-post_4.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/02/blog-post_4.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content