இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுக...
இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்பட்டு இங்கிலாந்தில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.