பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முடிவு.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முடிவு.

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்தி...


நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், ஶ்ரீதரன்,  சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் மணிவண்ணன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஶ்ரீகாந்தா உள்ளிட்டோரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.

தமிழர்களின் உரிமைக்காக கடந்த 3ம் திகதி அம்பாறை − பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, கடந்த 7ம் திகதி யாழ்ப்பாணம் − பொலிகண்டியில் நிறைவு செய்யப்பட்டது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், குறித்த 5 தினங்களில் சுமார் 15 நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டிருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாது முன்னோக்கி சென்றிருந்தனர்.

இந்த நிலையில், பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடியோ காணொளிகளின் ஊடாக, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் சட்டப்பிரிவு ஆகியோரின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு பெருபாலான முஸ்லிம்களின் ஆதரவும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3294,lanka,8589,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,575,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முடிவு.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முடிவு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrEFW2f0GaZ56sUrvM__Z80gwAF9sQz9o2bpdDIDpMCFDekDI1IshErw63LNkGmKgysq2ONu2xvzYfXpVAJ4yZPVqCrolbJWvG1X_1lPe-S_ZWdP99A4CFcsvHxOy8S9ydpw8JgSzYA-o/s320/FB_IMG_1612759753412.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrEFW2f0GaZ56sUrvM__Z80gwAF9sQz9o2bpdDIDpMCFDekDI1IshErw63LNkGmKgysq2ONu2xvzYfXpVAJ4yZPVqCrolbJWvG1X_1lPe-S_ZWdP99A4CFcsvHxOy8S9ydpw8JgSzYA-o/s72-c/FB_IMG_1612759753412.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/02/blog-post_89.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/02/blog-post_89.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content