நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண...
நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தன.
அதன்படி, “கொவெக்ஸ்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்
இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
தடுப்பூசியை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போதே 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,
கொவிட் வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.