யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இது குறித...
யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இது குறித்து மாகாண சுகாதார சேவைகளபணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறுகையில், காரைநகர் பகுதியில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் 8 பேரும் காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்களாவர். மேலும் ஊர்காவற்றுறை பகுதியில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த 9 பேரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளனவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் யாழ்.போதனா வைத்திய சாலை சிற்றூழியர் ஒருவர், மேலும் உடுவில் பிரதேசத்தில் 2 பேர், கோப்பாய் ஒருவர்,
யாழ்.நகரம் ஒருவர் உட்பட 23 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.