பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கேள்விகளை முன்வைத்து கஜேந்திரனுக்கு பார்த்தீபன் கடிதம்...

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கேள்விகளை முன்வைத்து கஜேந்திரனுக்கு பார்த்தீபன் கடிதம்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கயேந்திரன் அவர்களுக்கு வரதராஜன் பார்த்தீபனால் அனுப்பப்பட்ட கடிதம்.. பாகம்.. 01 "செல்வராசா ...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கயேந்திரன் அவர்களுக்கு வரதராஜன் பார்த்தீபனால் அனுப்பப்பட்ட கடிதம்..
பாகம்.. 01

"செல்வராசா கஜேந்திரன்.
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.
23.02.2021

வணக்கம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரே!

தங்களுடைய 27.01.2021 ஆம் திகதிய கடிதத்தில் என்னை தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவித விசாரணைகளுமின்றி நீக்குவதாக அறிவித்திருந்தீர்கள். முதலில் இதனை நான் முற்றாக நிராகரிப்பதோடு என்மீது சுமந்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கவே விரும்புகின்றேன்.


நீங்கள் என்னை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கியமைக்கு கூறிய பிரதான காரணம் கட்சிக்கு விசுவாசமின்னை, முன்னணியை அழிப்பதற்கு சதி செய்தமை, எமது அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை மீறியமை, எமது அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்தமை, என்று உங்களுக்கே உரித்தான  வகையில் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றீர்கள்.

கட்சிக்கு விசுவாமின்னை, கட்சிக்கு துரோகம் இழைத்தமை, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியமை என்று எனக்கு நீங்கள் கூறுகின்ற எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மையில் உங்களுக்கே பொருந்தும். மேற்படி காரணங்கள் கொண்டு ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவது என்றால் முதலில் கட்சியைவிட்டு நீக்க வேண்டியது உங்களைதான் என்ற ஒரு விடயத்தினை ஆரம்பத்திலேயே தங்களுக்கு சுருக்கமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன். அத்துடன் நீங்கள் எவ்வாறு கருத்துருவாக்கங்களை கட்சிக்குள் எப்படி விதைத்தீர்கள் அதனை எப்படி வளர்த்தீர்கள், எப்படி ஒருவரை பயன்படுத்தி விட்டு தூக்கி போட்டீர்கள், கட்சிக்குள் எவ்வாறு நயவஞ்சமாக செயற்பட்டு அழித்தீர்கள். எப்படி சிறு சிறு குழுக்களை உருவாக்கினீர்கள் என்பதனை நடந்த சம்பங்களைக் கொண்டும் நீங்கள் நடந்து கொண்ட முறைகளையும் வைத்துக் கொண்டு ஆதாரபூர்வமாகவும் நிறுவுகின்றேன். 

கடந்த பத்தாண்டுகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்ணாவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற முனைப்புடன்  அதன் கொள்கைகளை ஏற்று உங்கள் அரசியல் ஆதரவாளனாக பயணித்தேன். முதலில் என்னுடைய அப்பா இந்த அரசியல் பயணித்தில் 2010 ஆம் ஆண்டு இணைந்த போது நானும் ஒரு ஆதரவாளனாக பயணித்தேன். தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் தலைவராக என்னுடைய அப்பா இருந்தபோதும் பல தீர்மானங்கள் அவரை மீறி அவருடைய சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.  உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடவேண்டும் என்றும் அது பிழையானவர்களின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்றும் அத்துடன் இவ்வாறான மக்களுடன் நெருக்கத்தினை உருவாக்குகின்ற தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு பாராளுமன்ற தேர்தலில் மட்டும் போட்டியிட்டால் மக்கள் எம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விவாதம் செய்தார். ஆனால் கட்சியின் கொள்கை அதை மீற முடியாது என்பதன் அடிப்படையில் அதனை நீங்கள் நீராகரித்தீர்கள். தான் ஒரு 'றபர் ஸ்ராமாக' இருக்க விரும்பவில்லை என்று தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்தார்.

இறுதியாக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லது ஏதாவது ஒரு தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் புறக்கணிப்பு என்பது சிறந்த முடிவாக அமையாது என்ற அப்பாவின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர் தனது இராஜனமா கடிதத்தினை கஜேந்திரகுமார் அண்ணாவிடம் கொடுத்தார். அவ்வாறு கொடுக்கும் போது அவர் அருகில் நின்றவன் என்பதன் அடிப்படையில் கூறுகின்றேன். அப்பாவின் கடிதத்தை கஜேந்திரகுமார் அண்ணா 'சேர் நான் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று கூறினார். ஆனால் நீங்கள் 'சேர் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கவே போகக்கூடாது அது எங்களுடைய கட்சி கொள்கைக்கு விரோதமானது. நீங்கள் அதை செய்ய கூடாது' என்றீர்கள். அதற்கு அப்பா 'கஜன் நான் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவிவியை இராஜனமா செய்யும் போது கூட நான் யாரிடமும் கேட்டு செய்ய வில்லை. அது நான் எடுத்த என்னுடைய தன்னிப்பட்ட முடிவு ஆகவே எனக்கு நீங்கள் இதை சொல்லத் தேவையில்லை' என்று கூறியதை நீங்களும் மறந்து இருக்க மாட்டீர்கள். அத்துடன் அப்பா தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறினார் என்பதை விட வெளியேறவைக்கப்பட்டார். அதற்கு முக்கிய சூத்திரதாரியே நீங்கள் மட்டும் தான். (அப்பா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் தன்னுடைய முகப்புப்பக்கத்தில் இட்டப பதிவு இணைப்பு 01 என்று இணைக்கப்பட்டுள்ளது)
இதன் அடிப்படையில் உங்களிடத்தில் சில வினாக்களை நான் கேட்கின்றேன். 

வினா { 01
2013 ஆம் ஆண்டு என்னுடைய அப்பா கட்சியின் தலைவராக இருந்த போது மாகாணசபைத் தேர்தல் கேட்க வேண்டும் என்று கூறிய போது அதனை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கவே போககூடாது அது தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் கட்சிக் கொள்கைக்கு எதிரானது என்று கூறி அதனை நிராகரித்த  நீங்கள் எதன் அடிப்படையில் தற்போது வர இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலை எதிர் கொள்ளப்போகின்றீர்கள்?

வினா { 02
தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் கட்சிக் கொள்கைக்கு ஏற்றவகையில் மாகாணசபை மாற்றியமைக் கப்பட்டதா? அல்லது மாகாணசபை முறைமைக்கு ஏற்றாற் போல் தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் கட்சிக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றதா?

வினா { 03
உடனடியாக நீங்கள் ஒரு விடயத்தினை கூறுவீர்கள் பிழையான தரப்பிற்கு மாகாணசபை செல்லகூடாது என்று. இதைதான் 2013 ஆம் ஆண்டும் கட்சியின் தலைவராக இருந்த என்னுடைய அப்பாவும் கூறினார். ஏன் அன்று நீங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை?

அப்பா கட்சியினை விட்டு நீங்கிய பிற்பாடு அவரை உங்களுடைய வழக்கமான நடைமுறையின் கீழ் துரோகி என்றீர்கள். அவர் யாருடனோ டீல் போட்டுத்தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார் என்று கட்டுரைகள் வரைந்தீர்கள். பலருக்கும் அதனை முகப்பு பக்கத்தில் போடுமாறு மின்னஞ்சல் செய்தீர்கள். அதில் ஒருவர் வடமாராட்சி காண்டீபன் அண்ணா 'கஜேந்திரன் அண்ணா உங்கள் அப்பாவைப் பற்றி எழுதி என்னுடைய முகப்பு பக்கத்தில் போடுமாறு கூறி மின்னஞ்சல் செய்த கட்டுரையை நான் போடவில்லை' என்று பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிற்பாடு கூறினார். 

வினா { 04
2013 அப்பா யாருடனோ டீல் போட்டு மாகாண சபை தேர்தல் கேட்கச் சொன்னார் என்று கூறுகின்ற நீங்கள் அதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?

சரி அவர் நீங்கள் கூறுகின்றது போல் டீல் போட்டுத்தான் மாகாணசபைத் தேர்தல் கேட்கச் சொன்னார் என்று வைத்துக் கொள்ளுவோமேன். அதை நீங்கள் மறுத்தீர்கள் நல்ல விடயம். 
வினா { 05
ஆனால் இப்போது நீங்கள் மாகாணசபைத் தேர்தல் கேட்கப்போகின்றீர்களே அப்ப நீங்கள் யாருடன் டீல் போட்டு இப்போது கேட்கின்றீர்கள்?
வினா { 06
2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் கேட்டால் ஏன் ஒரு வாக்காளனாக வாக்களித்தால் அது கட்சியின் கொள்கை மீறல் 2021 ஆம் ஆண்டு அல்லது 2022 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டால் அது கட்சிக் கொள்கை மீறல் இல்லையா?

என்னுடைய அப்பா மாகாணசபைத் தேர்தலை யாருடனோ டீல் போட்டுத்தான் கேட்டார் என்ற புரளியை நீங்கள் 2013 ஆண்டில் மட்டும் சொல்ல வில்லை 2020 ஆண்டு கூட ஒருவரிடம் சொன்னீர்கள் அதன் முழுமையான ஒலிப்பதிவை நான் கேட்டேன். 

வினா { 07
எந்த அடிப்படையில் எந்த ஆதாரத்துடன் நீங்கள் என்னுடைய அப்பா டீல் போட்டுத்தான் தேர்தல் கேட்கச்சொன்னார் என்று கூறமுடியும். யாருடன் டீல் போட்டார்? என்ன டீல் போட்டார்? 
என்ற கேள்விகளுக்கு பதில் இருக்கின்றதா உங்களிடம். 

1987 ஆம் ஆண்டில் உங்களுக்கு அரசியல் தேசியம் என்றாலே என்ன என்றே தெரியாத காலத்தில் அப்பா எல்லா இடங்களிலும் தன்னுடைய ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு மாகாணசபை எமக்கு ஏற்றமுறைமையல்ல என்ற விடயத்தினை தெளிவுபடுத்தியே வந்தார் . (ஒரு மாணவனின் முகப்பு புத்தகப்பதிவு இணைப்பு 02 என இணைக்கப்பட்டுள்ளது.)
ஆக என்னுடைய அப்பாவை இணைத்து பயன்படுத்தி பின்னர் வெளியேறச் செய்து துரோகி ஆக்கினீர்கள். என்பது வெளிப்படை இதில் கணிசமான பங்கு உங்களுக்கே உரியது.

வினா { 08
என்னை நீங்கள் கட்சியை உடைத்ததாக குழப்பம் விளைவித்ததாக சிறு குழுக்களை உருவாக்கியதாக கட்சியை அழிக்க சதி செய்ததாக கூறுகின்றீர்கள். இவற்றுக்கு என்ன ஆதாரம் வைத்திருக்கின்றீர்கள்? 
ஆனால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய நீங்களும் உங்களுடைய ஒரு சில சகாக்கள்; அவ்வாறு கட்சியை அழித்தீர்கள், உடைத்தீர்கள் சதி செய்தீர்கள், சகுனி வேலை செய்தீர்கள் என்பதனை நான் ஆதாரபூர்வமாக இதில் நிரூபணம் செய்கின்றேன்.

அதற்கு முதல் நடந்த சில விடயங்களை நீங்கள் உங்கள் வேலைப்பளு காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக மறந்து போய் இருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் அதனை நினைவு படுத்த வேண்டியது இங்கு முக்கியமானது.
நீங்கள் மணி தேர்தலில் போட்டியிட சம்மதிக்க முன்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று பார்ப்போம்.

சம்பவம் { 1
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முரண்பாட்டின் பின் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய அலுவலகத்தில் நான் நினைக்கின்றேன் 2019 ஆண்டு டிசம்பர் மாதம் இல்லாவிட்டால் ஜனவரி மாதம் நடைபெற்ற வேட்பாளர்கள் தொடர்பான கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன். அக் கூட்டத்தில் மணிவண்ணன் தன்னுடைய நிலைப்பாடை உறுதியாக கூறினார். நான் இத் தேர்தலில் தனிப்பட்ட காரணங்களினால் போட்டியிடவில்லை ஆனால் தேர்தல் வெற்றிக்காக உழைப்பேன் என்று. பல விதமான விவாதங்களின் பின்னர் கூட்டத்தின் இடையில் மணிவண்ணன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்து விட்டு சென்று விட்டார். அத்துடன் கூட்டம் முடிவடைந்து விட்டது. 
பிற்பாடு நான் உங்கள் வீட்டுக்கு வந்தேன். அங்கு கஜேந்திரகுமார் அண்ணா மிகவும் கோவத்துடனும் அதிர்சியிலும் இருந்தார். நீங்களும் அதிர்ச்சியில் இருந்தீர்கள். உங்களுடைய நிலையைப் பார்த்து விட்டு அன்று நாம் மணியிடம் என்று சண்டை போட்டோம் ஏன் இப்படி நடக்கின்றீர்கள் நீங்கள் கட்டாயம் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று.

சம்பவம் { 2
இதற்கு சில நாட்கள் கழித்து நான் உங்கள் அலுவலகத்திற்கு வந்தேன். அப்போது நீங்கள் வெளியில் உங்களுடைய மோட்டாhர் சைக்கிளுக்கு அருகில் நின்று தொலைபேசி கதைத்துக் கொண்டு இருந்தீர்கள். நான் உங்களிடம் வந்து கேட்டேன் அண்ணா எங்களுக்கு ஒரு ஆசனமாவது கிடைக்கும் தானே என்று. அதற்கு நீங்கள் சொன்னீர்கள் 'அது உங்கட கையில் தான் இருக்கு மணி இல்லாவிட்டால் அது கஸ்டம் நீங்கள் எப்படி யாவது மணியினை போட்டியிட வையுங்கள்' என்று 

சம்பவம் { 3
கஜேந்திரகுமார் அண்ணா ஒரு நாள் என்னிடம் சொன்னார் மணிக்கு விசராப்பா நாம்; வெற்றி பெறபோகின்ற நேரத்தில் வரமாட்டேன் என்ற நிக்குது என்று.

சம்பவம் { 4
கஜேந்திரகுமார் அண்ணா நாங்கள் வெல்லப்போகின்றோம் ஏன் மணி வரமாட்டேன் என்று நிக்குது மணியைக் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று கூறினார் ஆனால் நீங்கள் பல தடவைகள் மணி இல்லாவிட்டால் நாங்கள் அழிந்து விடுவோம் மணியினைக்கூட்டிவாருங்கள் என்று கெஞ்சினீர்கள். பிளிஸ் பார்த்திபன் என்று சொன்னீர்கள்.

சம்பவம் { 5
உங்கள் எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் அமைய நானும் நண்பர்களும் மணியினை பல வற்புறுத்தலுக்கு மத்தியில் சம்மதிக்கவைத்தோம் மணி சம்மதிக்கும் போது விடியற்காலை 2 மணி. உங்களுக்கு அந்த நேரமே அறிவித்தோம் மிகவும் மகிழ்ச்சி கொண்டீர்கள். கஜேந்திரகுமார் அண்ணா கூறினார் உண்மையாகவா எனி தான் நான் நித்திரை கொள்ளப்போகின்றேன் என்று. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லையா என்று இச்சம்பவத்தின் போது அருகில் இருந்த சட்டத்தரணி சுகாஸ் இடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

இவை நடந்து முடிந்த சில உணர்ச்சிபூர்வமான சம்பங்கள். இனி விடயத்திற்கு வருவோம் நீங்கள் மணி சம்மதித்த பின்னர் ஆடுத்த வாரம் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று.

சம்பவம் { 6
ஒரு நாள் என்னிடம் நீங்களாகவே வந்தீர்கள். பல விடயங்களினை கதை;து விட்டு 'பார்த்திபன் கட்சிக்குள் கஜேந்திரகுமாரா அல்லது மணிவண்ணனா என்று வரும் போது நீங்கள் கட்டாயம் கஜேந்திரகுமாhர் அண்ணா பக்கம் தான் வரவேண்டும் என்றீர்கள்'. அப்போது நான் உங்களுக்கு கூறினேன் 'அண்ணா கட்சிக்குள் இப்படியான எந்த ஒரு பிளவுகளும் இல்லை அவ்வாறு இருக்கையில் ஏன் நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் தயவு செய்து இவ்வாறு சொல்லாதீர்கள் என்னிடம் சொல்லிய இந்த விடயத்தினை வேறு யாருக்கும் சொல்லதீர்கள் நானும் கடைசிவரைக்கும் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்றேன்'. நான் அவ்வாறே நடந்து கொண்டேன் யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அனைவருக்கும் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த விடயத்தினை நான் உங்களிடம் இறுதியாக பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின் மணியை ஏன் கட்சியை விட்டு நீக்கினோம் என்று நீங்கள் நடத்திய சந்திப்பில் எல்லாருக்கும் முன் நேருக்கு நேர் உங்களிடத்தில் கேட்டபோது நீங்கள் எனக்கு தந்த பதில் மௌனம்.

கட்சி ஒன்றுமையாக இருக்கும் போது கட்சிக்குள் கஜேந்திரகுமாரா மணிவண்ணனா என்ற சித்தாந்தமே இல்லாத  போது அந்த சித்தாந்ததை என்னிடம் மட்டுமல்ல அல்ல நான் கெஞ்சிக்கேட்டதையும் மீறி எல்லாரிடமும் விதைத்தது நீங்கள். இது தான் நீங்கள் கூறிய கட்சிக்க விசுவாசமின்னை, கட்சிக்கு துரோகம் இழைத்தமை, பிளவுகளை ஏற்படுத்தியமை. ஆக எமது கட்சிக்குள் ஒற்றுமை என்னும் எண்ணக்கருவை சிதைப்பதற்கு முயற்சி எடுத்தது நீங்கள் அதற்கு நீங்கள் தூக்கிய ஆயதம் கஜேந்திரகுமாரா மணிவண்ணனா?

இதன் அடிப்படையில் உங்களிடத்தில் சில வினாக்களை நான் கேட்கின்றேன். 

வினா { 09
கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அன்று நான் இப்படி என்னிடம் கூறியதை வேறு யாரிடமும் கூறவேண்டாம் என்று உங்களிடத்தில் கெஞ்சி கேட்ட விடயத்தை நீங்கள் யாரிடமும் கூறியிருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அனைவரிடமும் வீடு வீடாக சென்று கூறினீர்கள் ஏன் அவ்வாறு கூறினீர்கள்?

வினா { 10
கட்சியை உடைத்தேன் கட்சிக்கு விசுவாசமில்லாமல் நடந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறுகின்றீர்கள். ஆனால் நான் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்  என்று  கட்சிக்கான  விசுவாத்தினை காட்டி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. ஆனால் கட்சிக்குள் ஒற்றுமையை குலைத்தேன் விசுவாசமில்லாமல் செயற்பட்டேன் என்று என்னை கட்சியில் இருந்து நீக்கிய நீங்கள் குறித்த விடயத்தினை எல்லாருக்கும் சொல்லியிருக்கின்றீர்கள் என்றால் கட்சியின் ஒற்றுமையை குலைத்தது கட்சிக்கு விசுவாசமில்லாமல் நடந்தது நானா நீங்களா?

சம்பவம் { 7
அன்று மேற்படி விடயத்தினை நீங்கள் கூறிய போது 'இப்படி சொல்லாதீங்கள் நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கவேண்டும்' என்று நான் கூறிய நிலையில் உங்களுடைய வினாவிற்கு  நநீங்கள் விரும்பிய பதிலை வழங்காத நான் காரணத்தினால் அடுத்து நீங்கள் கூறிய விடயம் தான் உங்கள் மீது நான் கொண்ட நன் மதிப்பை குறைத்தது உங்களுடைய சிறுமைத்தனத்தை எனக்கு காட்டியது.  'பார்த்திபன் உங்களுடைய அப்பாவை மணிதான் துரோகி என்று சொன்னது.' அப்போது நான் உங்களுக்கு கூறினே;ன் 'சரி அண்ணா அது எனக்கு தெரியாது ஆனால் அது அந்த நேரம் நடந்த விடயம் அதை விடுவோம்' இந்த விடயத்தையும் நீங்கள் என்னிடம் சொன்னதாக என்னிடம் ஒன்றாக திரிகின்ற யாரிடமும் நான் சொல்ல வில்லை. காரணம் எங்களுடைய ஒற்றுமை குழம்ப கூடாது என்பதற்காக மட்டும். இந்த விடயத்தை முதல் முதல் மற்றவர்கள் தெரிந்து கொண்டது பாராளுமன்ற தேர்தலில் பின் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் ஏன் இப்படி சொன்னீர்கள் என்று உங்களிடம் கேட்ட போது மட்டுமே.
இவ்விடயம் தொடர்பாக அன்றும் உங்களிடம் கேள்வி கேட்டேன் பதில் இல்லை இன்றும் அது தொடர்பில் கேள்விகள் கேட்கின்றேன்.
என்னுடைய அப்பா மாகாண சபைத் தேர்தல் கேட்கவேண்டும் என்றார். இல்லை கட்சிக் கொள்கைக்கு எதிரானது அப்படி செய்ய முடியாது என்றீர்கள் அவர் வெளியேறினார். அதற்கு நீங்கள் டீல் என்றீர்கள் சரி அதைவிடுவம்.  அந்த நேரம் நீங்கள் உங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் அப்பா வெளியேற வைத்தமை உண்மையில் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் எடுத்த சிறந்த முடிவு. என்னுடைய கேள்வி

வினா { 11
ஏன் மணிவண்ணன் விடயத்தில் மட்டும் இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ள வில்லை. அப்பா மாகாணசபைத் தேர்தலை புறக்கணிப்பது சரியான முடிவு இல்லை என்றால் அதற்கு பல பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை வெளியேற்ற வைத்தீர்கள் அதே நேரம் மணிவண்ணன் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது சரியானது ஆனால் அதனை மக்களிடத்தில் கொண்டு சென்றது பிழை என்றார்;. இம் முறை பாராளுமன்ற தேர்தல் கேட்கவில்லை என்றார். ஆனால் அவரை பலரிடம் கெஞ்சி பாராளுமன்ற தேர்தல் கேட்க வைத்தீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம். ?

வினா { 12
கொள்கையை மீறனார் என்று என்னுடைய அப்பாவை உடனடியாக தானாக வெளியேறச் செய்தது போல் மணிவண்ணனும் கொள்கையை மீறினார் என்று அவரை உடனடியாக வெளியேற்றிருக்க வேண்டும் அல்லது வெளியேற வைத்திருக்க வேண்டும். ஏன் அவர் விடயத்தில் அவ்வாறு நீங்கள் நடக்க வில்லை?

வினா { 13
மணிதான் உங்களுடைய அப்பாவைத் துரோகி என்று கூறினார் என்று நீங்கள் எனக்கு வகுப்பு எடுத்தீர்கள். மணி கூறினாரா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் உந்த வார்த்தையைச் சொல்லுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கின்றதா ? 
வினா { 14
மணி தான் அப்பாவை துரோகி என்றார் என்றால் .. ஏன் நீங்கள் ஒருத்தரும் துரோகி டீல் போட்டவர், நிகழ்ச்சி நிரல் என்று சொல்ல வில்லையா, கட்டுரை எழுதவில்லையா? அதை யாருக்கும் கொடுக்க வில்லையா? ஏதோ உங்கட கதையைக் கேட்டால் மணி மட்டும் தான் அப்பாவை பற்றி பிழையாக கதைத்தவர் நீங்கள் எல்லாம் உத்தமர்கள் என்பது போல் சொல்ல வருகின்றீர்களா?

வினா { 15
அண்ணா அப்பா தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை விட்டு வெளியேறியபின்னர் எங்களுக்கு கஜேந்திரகுமார் அண்ணா பற்றியோ மணி பற்றியோ சொன்னதை விட பல மடங்கு உங்களைப்பற்றிதான் சொன்னவர். இப்படி இருக்கையில் நீங்கள் எனக்குச் சொல்லுகின்றீர்கள் மணிதான் அப்பாதைத் துரோகி என்று சொன்னது என்று. உந்த வார்த்தையை எனக்கு சொல்ல உங்களுக்கு மனம் உறுத்த வில்லையா?

வினா { 16
சரி நீங்கள் எல்லாம் உத்தமர்கள் அப்பாவை மதித்தவர்கள் மணி மட்டும் தான் மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். அது 2013 ஆம் ஆண்டுடன் முடிந்த கதை. 2014 ஆம் ஆண்டு அவர் அமரத்துவம் அடைந்து விட்டார். அதன் பின்னர் நான் உங்களுடன் ஒரு ஆதரவாளனாக பயணித்தேன். பல இடங்களில்  சந்தித்திருக்கின்றோம் மிக நட்பாக பழகியிருக்கின்றோம். 2018 ஆம் ஆண்டு நான் நேரடி அரசியலுக்கு வந்தேன் அதன் பின்னர் முன்பை விட மிக நட்பாக பழகியிருக்கின்றோம். தனிய இருந்து பல கதைகள் கதைத்திருக்கின்றோம் ஆனால் அப்போது எல்லாம் எனக்கு இக் கதையைக் கூறாமல்  2020 ஆண்டு  மணி தேர்தல் கேட்க சம்மதித்த பின்னர் என்னிடம் இதனைக் கூறியதற்கு என்ன காரணம்? 

வினா { 17
ஒரே காரணம் நான் மணியினை வெறுக்க வேண்டும். அன்று கஜேந்திரகுமார் அண்ணா மணி என்று கட்சி இருக்கவில்லை. ஒற்றுமையாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் நீங்கள் இதனைச் சொல்லுகின்றீர்கள் என்றால் நீங்கள் ஒற்றுமையான கட்சியினை கஜேந்திரகுமார் அண்ணா மணி என்று பிரிக்க திட்டமிட்டதுடன் கஜேந்திரகுமார் அண்ணா பக்கம் ஆட்களை திரட்டுவதற்குதான் எனக்கு அதைச் சொன்னீர்கள். இதனை உங்களால் மறுக்க முடியுமா? பதில் அழிக்க முடியுமா? 
வினா { 18
ஆக எனக்கு நீங்கள் கூறிய கட்சியை உடைத்தமை, பிளவுகளை உருவாக்கியமை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளி  யார் என்பது தங்களுக்கு புரிந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. உங்களுக்கு புரிந்ததா?

இப்படி, எப்படிஎல்லாம் கட்சிக்குள் பிளவை உருவாக்கலாம் இந்த பிளவைப் பெரிதாக்காலம் என்று சுழன்று அடித்துக் கொண்டு சூழ்ச்சிகள் பல செய்து கொண்டு திரிந்த உங்களுக்கு கிடைத்தது ஒரு சந்தர்ப்பம். குழப்பங்களை விளைவிப்பத்தில் அல்லது உருவாக்குவதில் உங்களுக்கு இருக்கின்ற அனுபவத்தினை கொண்டு (இதற்குரிய உதாரணம் கடிதத்தின் இறுதியில் தருகின்றேன்) நடந்த ஒரு சம்பவத்தினை சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள்.

சம்பவம் { 08
எனது நண்பன் நடனசபேசன் 2010 ஆண்டில் இருந்து முன்னணியின் ஆதரவாளன் 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு கஜேந்திரகுமார் அண்ணாவிடம் அவரது வீட்டுக்கு சென்று தேர்தல் நிதியினை உங்களுக்கு முன்னால் வழங்கியவன். நீங்களே என்னிடம் பல தடைவை 'என்னப்பா உம்மட ஆளிட கேளுமன் கொஞ்ச காசு தரச் சொல்லி' என்று கேட்டு இருக்கின்றீர்கள். அதைவிடுவம். 

அவன் 2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் முன்னணி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அது தொடர்பாக விடயங்களினை எழுதி தனது முகப்பு பக்கத்தில் ஒரு மெசேஞ்சர் குறுப் ஒன்றினை உருவாக்கி அதை பதிவிட்டிருந்தான். அதில் நான் மணி உட்பட முன்னணியின் சில செயற்பாட்டாளர்கள் என 15க்கும் குறைவானவர்களையே சேர்த்திந்தான். அவன் தன்னுடைய சொந்தக் கருத்தாக அதனை பதிவிட்டிருந்தான். அவன் பதிவிட்டது எனக்கும் தெரியாது. அவன் பதிவிட்ட சிறிது நேரத்தில் மணி எனக்கு தொலைபேசி எடுத்து 'அண்ணா நடனசபேசன் என்றது உங்கட நண்பண் தானே அவன் ஏன் அண்ணா இப்படி எழுதியிருக்கின்றான்' என்று. 'நான் ஏன் அண்ணா என்ன நடந்தது' என்று கேட்க 'அவன் ஏதோ எல்லாம் எழுதியிருக்கின்றான் நான் அதில் இருந்து வெளியேறிவிட்டேன். அண்ணாக்கள் என்ன நினைப்பாங்கள். அவனுக்கு போன் எடுத்து அதனை எடுக்கச் சொலுங்கள்' என்று கோவமாக எனக்கு ஏசிவிட்டு வைத்து விட்டார். நான் சபேசனுக்கு போன் எடுத்து அவனுக்கு ஏசிவிட்டு 'நீ போட்டு இருக்கின்றத முதல் அதை உடன் எடு' என்று அவனுக்கு சொல்லி விட்டு நானும் அதில் இருந்து வெளியேறி விட்டேன். அவனும் உடனடியாக அதை அகற்றி விட்டான். இது நடந்த கதை எனி விடயத்திற்கு வருவோம்.
1. ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவித்தால்  உடனடியாக கட்சியை உடைக்கின்றான் வெளிநாட்டுப் பின்னணி, பிழையான தரப்பு, என்று ஆர்ப்பரிக்கின்ற ஒரே ஒரு கட்சி எங்கட கட்சி மட்டும் தான்.

2. இது நடனசபேசன் விடயத்தில் மட்டுமல்ல எல்லோர் விடயத்திலும் இது தான் நடைமுறை யாராவது ஒரு கட்டுரையாளர் ஒரு கட்டுரை எழுதும் போது தங்களுக்கு பிடித்த விடயம் அக் கட்டுரையில் வரவில்லை என்றால் அல்லது தங்களுக்கு விரும்பம் இல்லாத விடயம் அக் கட்டுரையில் வந்தால் உடன் அக் கட்டுரையாளரை விமர்சிப்பதும் 300 ரூபா எழுத்தாளர்கள் என்று அக் கட்டுரையாளரை கேவலமாக எழுதுவதும் தொடர் கதை தான். 

3. அவன் கட்சியின் வெறும் 15க்கும் குறைவான உறுப்பினர்களை இணைத்தே அக் கட்டுரையை போட்டிருந்தான். அதுவும் நான் தொலைபேசி எடுத்து சொன்ன வுடன் உடனடியாக அகற்றியும் விட்டான். கூடியது ஒரு மணி நேரத்துக்குள் அக் கட்டுரை போடப்பட்டு அகற்றப்பட்டு விட்டது. அதனை பார்வையிட்டது அந்த 15க்கும் குறைவான உறுப்பினர்கள் தான். 

4. ஒரு பொறுப்புள்ள கட்சி, ஒற்றுமையை விரும்புகின்ற கட்சி எனில் என்ன செய்திருக்க வேண்டும் அது ஒரு தனிநபருடைய கருத்துக்கள் அதனை விட்டுவிடுவோம் என்று கூறியிருக்கவேண்டும். 

5. ஆனால் நீங்கள் செய்தது என்ன? :கட்சியை உடைக்க வெளிகிட்டு மூக்குடைந்து போன நடனசபேசன்' என்ற பெயரில் ஒரு வைபர் குருப்பினை உருவாக்கி அதில் அவன் எழுதிய கிறீன் சொட்டினை போட்டு அது பற்றி மிகப்பெரிய விவாதங்களினை பல நாட்கள் நடத்தினீர்கள்.

6. அத்துமட்டுமல்ல முன்னணியின் பல ஆதரவாளர்கள் உள்ள குறுப்புக்களில் கூட அந்த கிறீன் சொட்டினை போட்டு பரவலாக்கம் செய்தீர்கள். 

இதன் அடிப்படையில் உங்களிடத்தில் சில வினாக்களை நான் கேட்கின்றேன். 

வினா { 19
அவன் எழுதியது 15 பேருக்கே தெரியும் அது ஒரு பிழையான கருத்து என்று சொல்லுகின்றீர்கள் அக் கருத்து கட்சியினை பிளவு படத்துவதற்கான கருத்து என்று கூறுகின்றீர்கள். அதை நானும் நூறுவீதம் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அப்படி இருக்கையில் ஏன் 15 பேருக்கும் குறைவானகவர்களுக்கே தெரிந்த ஒரு கருத்தை 147 பேர் இருக்கின்ற ஒரு பைவர் குருப் என்று எல்லாவற்றிலும் நீங்கள் போட்டு பரலாக்கம் செய்தீர்கள்?

வினா { 20
எங்களுடைய கட்சியினை பிளவு படுத்தும் ஒரு கருத்துருவாக்கம் என்றால் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பின் பொதுச் செயலாளார் ஆகிய நீங்கள் அதனை பரவாலக்கம் செய்திருக்க கூடாதே. அதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க  வேண்டும். அதை தடுத்திருக்க வேண்டும் மாறாக அதனை பரவலாக்கம் செய்தது ஏன்? 

வினா { 21
ஆக முதலே உங்களுடைய எண்ணத்தி;ல் முன்னணியை கஜேந்திரகுமார் - மணிவண்ணன் என்ற பிளவு பற்றி செயலாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது அதனால் தான் அதனை பரவாலாக்கம் செய்தீர்கள். எனக்கு தெரியாது அவர்கள் தான் செய்தார்கள் என்று நீங்கள் பதில் அளிக்க முடியாது ஒரு பொறுப்பான கொள்கைவழி தவறாத நேர்மையான அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கின்ற நீங்கள் அவ் அமைப்பினை பிளவுபடுத்தும் ஒரு கருத்துருவாக்கம் இது என்று நீங்கள் தெரிந்த நிலையில் அதனை  எல்லா உறுப்பினர்களுக்கும் பரவ அனுமதித்து ஏன்?  நீங்களும் கட்சி பிளவு படவேண்டும் என்ற எண்ணகருவில் இருந்தமையினாலையா? 

வினா { 22
கட்சி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்று தாங்கள் நினைத்திருந்தால் காதும் காது வைத்தது போல் இதற்கு முடிவெடுத்திருப்பரீகள். அதை விடுத்து அக் கருத்துருவாக்கத்திற்கு நீங்கள் ஊக்கியாக செயற்பட்டது உங்கள் விருப்பதை அடைவதற்கே.
இதற்கு பின்னர் உங்களுடைய சகாக்கள் வைபர் குறுப்புக்களில் என்னை படு கேவலமாக விமர்சித்தனர். முன்னணியினை அழிக்க வந்த புல்லுருருவி, துரோகி, முன்னணியின் கறை, சதிகாரர் என்று பல வார்த்தைப்பிரயோகங்களால் என்னை விமர்சித்தார்கள்.. (அவ்வாறு விமர்சித்த கிறீன் சொட்ஸ் இணைப்பு 3 என இணைக்கப்பட்டுள்ளன)

ஆனால் உங்கள் சகாக்கள் உதிர்த்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் நூறு வீதம் பொருத்தமானவர் நீங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்தும் அதனை மறைத்து என்னை அவ்வாறான வார்த்தைகள் கொண்டு விமர்சித்த அவர்களின் அறிவுத் திறமையை நினைத்து நான் புன்னகைக்கின்றேன். 

இவ்வாறு அவர்கள் விமர்சித்து கொண்டிருந்த நிலையில் நான் உங்களுக்கு ஒரு நாள் தொலைபேசி எடுத்து நினைவுநாள் ஒன்றுக்கு உணவருத்த வருமாறு கூறினேன். அப்போது நான் கேட்டேன் 'நாங்கள் துரோகிகள் புல்லுருவிகள் எனவே சாப்பிட வருவீர்களா அண்ணா' என்று அதற்கு நீங்கள் உடனே சொன்னீர்கள் 'ஐயோ பார்த்திபன் எங்களுக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை நாங்கள் உங்களை அப்படி நினைக்கவே இல்லை. அவங்கள் சும்மா எழுதி துழைக்கின்றாங்கள்' அத்துடன்  'சுகாஸ் பற்றி அக் கட்டுரையில் குறைத்து எழுதப்பட்டதனால் சோமு ஆட்கள் தான் அதனை பொறுத்துக் கொள்ளாமல் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றார்கள்' என்று கூறினீர்கள்.

வினா { 23
உண்மையாக அண்ணா உங்களை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உங்களுடன்  திரிகின்ற  உங்களுடன் நெருக்கி பழகின்ற உங்களுடைய மிக தீவிரமான ஆதரவாளர்கள் உங்களுடைய சகாக்ககள் எழுதுகின்றார்கள் அதுவும் தமிழ்;த் தேசியமக்கள் முன்னணியின் கட்சியின் குறுப்புக்களில் எழுதுகின்றார்கள் அப்படி இருக்கையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்கின்றீர்கள் இது சரியா? 

வினா { 24
சரி சம்மந்தமே இல்லை என்று வைத்துக்கொள்ளுவோம். ஏன் நீங்கள் அதை தடுக்க முயற்சிக்கவில்லை. 
நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள் அண்ணா ஏன் என்றால் மற்றவர்களை கேவலமாக விமர்சிக்க வேண்டும் என்ற பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதே நீங்கள் தான் என்பதற்கான விபரத்தினையும் என்னுடைய கடிதத்தின் இறுதியில் தெரிவிக்கின்றேன்.

இச் சம்பவம் தொடர்பாக ஒரு தடவை சுகாஸ் என்னிடம் சொன்னார் 'அண்ணா நீங்கள் அந்த மெசேஜர் குறுப்பில் இது பிழையான விடயம் என்று ஒரு செய்தியை போட்டு விட்டடு வெளியேறியிருக்க வேண்டும்' என்று. நானும் அதனை ஏற்றுக்கொண்டு 'மணி தொலைபேசி அழைப்பு எடுத்து கோவப்பட்டு கதைத்த போது நானும் உடனடியாக அதை வாசிக்க கூட இல்லை அதில் இருந்து விலகிவிட்டேன்' என்றேன்.

வினா { 25
ஐயோ பார்த்திபன் எங்களுக்கு இதில் தொடர்பு இல்லை நாங்கள் உங்களை அப்படி நினைக்கவில்லை என்று எனக்கு கூறிய நீங்கள் பல இடங்களில் நடந்த சிறு சிறு சந்திப்புக்களில் நான் ஒரு பச்ச பொய்யன். எல்லாத்துக்கும் காரணம் நான் தான் கட்சியை பிளவு படுத்தினவன் என்று மாறி சொல்ல உங்களுக்கு எப்படி மனது வருகின்றது."

தொடரும்..

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கேள்விகளை முன்வைத்து கஜேந்திரனுக்கு பார்த்தீபன் கடிதம்...
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கேள்விகளை முன்வைத்து கஜேந்திரனுக்கு பார்த்தீபன் கடிதம்...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigChSKxYqd9tgZrLv9HRf4D3AnbeGHtZ_kG3ISsZ34HH8g7pkb3DcoGA__VADfCGgpM8KHD1Yt7Y1JlZM6K45BOIxpq0UmmmHTN8Z5x6hCw8-z8EnTeGi0ALrcZ5jxFV12DwJeT7U06KA/w350-h350/FB_IMG_1555110686553-1.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigChSKxYqd9tgZrLv9HRf4D3AnbeGHtZ_kG3ISsZ34HH8g7pkb3DcoGA__VADfCGgpM8KHD1Yt7Y1JlZM6K45BOIxpq0UmmmHTN8Z5x6hCw8-z8EnTeGi0ALrcZ5jxFV12DwJeT7U06KA/s72-w350-c-h350/FB_IMG_1555110686553-1.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/03/blog-post_13.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/03/blog-post_13.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content