அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டாலும் எரிபொருள் அல்லது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க அதற்கு உரிமை இல்லை என்று, இலங்கைப் பெற்றோலியக் க...
அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டாலும் எரிபொருள் அல்லது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க அதற்கு உரிமை இல்லை என்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கொரோனாத் தொற்று நோயின் போது, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருந்தது.
எனினும், பொதுமக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க இந்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், புத்தாண்டு பருவத்தின் இறுதி வரை எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
புது வருடத்துக்குப் பின்னர் மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.