யாழ் வலயப் பாடசாலைகளின் பரீட்சைகள் இணையவழி ஊடாக நடாத்தப்படும்... வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு.. யாழ் கல்வி வலயப் பாடசாலைகளின் உயர்தர...
யாழ் வலயப் பாடசாலைகளின் பரீட்சைகள் இணையவழி ஊடாக நடாத்தப்படும்... வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு..
யாழ் கல்வி வலயப் பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்படும் என யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் பொன்னையா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் வலயப் பாடசாலைகள் சிலவற்றில் தொண்டமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைகள் இடம்பெற்றமை தொடர்பில் மேல் மட்டங்களின் கவனத்திற்கு
கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் பரீட்சைகள் அந்தந்த பாடசாலைகளின் Viber, மற்றும் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடாத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.