கொவிட் தொற்றினால் நாளொன்றில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளொ...
கொவிட் தொற்றினால் நாளொன்றில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றில் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று (27) 3000தை தாண்டியது.
இதன்படி, நேற்றிரவு (27) 11:59வுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், இந்தியாவில் 362,902 திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் தொற்று தொடர்பான தரவுகளை வெளியிடும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
அத்துடன், இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3285ற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவின் 17,988,637 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 201,165ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.