மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினா...
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினார்.
குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.
நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் காலமானாதாக அவர் தெரிவித்தார்.
ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.