முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று அங்குனகோலபெலெஸ்ஸா சிறைச்சாலைக்கு ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று அங்குனகோலபெலெஸ்ஸா சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவின் உடல்நிலை குறித்து நாமல் விசாரித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றதை குறிப்பிடத்தக்கது.