பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை தேவைக்கு ஏற்ப, அரசாங்கம் பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்....
பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை தேவைக்கு ஏற்ப, அரசாங்கம் பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வாய்மூல வினா ஒன்றிற்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், தம்மால் இயன்ற விடயங்களை அந்த வைத்தியசாலைகளுக்கு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.