முல்லைத்தீவு - நீராவிப்பிட்டி பகுதியில் வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில சிகிச்சை பெற்று...
முல்லைத்தீவு - நீராவிப்பிட்டி பகுதியில் வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளையில் - நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 16.04.2021 அன்று கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர்
சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மீது குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்து இடம்பெற்றதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார்.