இலங்கையில் நாளை முதல் அமுலுக்குவரும் புதிய கட்டாய நடைமுறை...

இலங்கையில் நாளை முதல் அமுலுக்குவரும் புதிய கட்டாய நடைமுறை...

இலங்கையில் நாளைய தினம் முதல் வீடுகளை விட்டு வெளியேறுவோர் கட்டாயம் தேசிய அடையாளஅட்டையை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாள...

இலங்கையில் நாளைய தினம் முதல் வீடுகளை விட்டு வெளியேறுவோர் கட்டாயம் தேசிய அடையாளஅட்டையை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாளைய தினம் முதல் தேசிய அடையாளஅட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, மக்கள் வீதிகளுக்கு வருகைத் தர வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


 
வீடுகளை விட்டு வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது தேசிய அடையாளஅட்டையை எடுத்துச் செல்லுமாறு அவர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்கள், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றையேனும் கொண்டு செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருட்களை கொள்வனவு செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அடையாளஅட்டை இலக்கங்களின் பிரகாரம் மாத்திரமே வெளியில் வர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1,3,5,7,9) இருக்கும் பட்சத்தில், ஒற்றை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் கூறுகின்றார்.


 
அதேபோன்று, தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாக (2,4,6,8,0) இருக்கும் பட்சத்தில், இரட்டை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அனைத்து இலங்கை பிரஜைகளும் கட்டாயம் தேசிய அடையாளஅட்டையை பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


தேசிய அடையாளஅட்டை இல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, கடமைகளுக்கு எவரேனும் ஒருவர் செல்வாராயின், இந்த நடைமுறை அவர்களுக்கு செலுப்படியாகாது என அவர் குறிப்பிடுகின்றார்.


இந்த நடவடிக்கை நாளை (17) முதல் இந்த மாத இறுதி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார். 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3327,lanka,8617,medical,7,Medicial,39,sports,351,swiss,15,technology,79,Trending,4219,Videos,10,World,576,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இலங்கையில் நாளை முதல் அமுலுக்குவரும் புதிய கட்டாய நடைமுறை...
இலங்கையில் நாளை முதல் அமுலுக்குவரும் புதிய கட்டாய நடைமுறை...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Q5RJZCGiw52OA9KqTp-PlBg3SklhH3x_q1ZpZvDhWL2Dr9L8lewfODC0mybfzejuNShU2elZ2Y0bjKswCn_djVQFDtkBWPrtFoB-6BhamNTht4rD35wUFLhk-wULZBrRN_kO40Q880I/w516-h232/Capture.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Q5RJZCGiw52OA9KqTp-PlBg3SklhH3x_q1ZpZvDhWL2Dr9L8lewfODC0mybfzejuNShU2elZ2Y0bjKswCn_djVQFDtkBWPrtFoB-6BhamNTht4rD35wUFLhk-wULZBrRN_kO40Q880I/s72-w516-c-h232/Capture.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2021/05/blog-post_28.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/05/blog-post_28.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content