சங்குப்பிட்டி பிள்ளையார் ஆலயத்தை இடிக்க வேண்டும் என கூறவில்லை.. கிளி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு. சங்குப்பிட்டியில் ...
சங்குப்பிட்டி பிள்ளையார் ஆலயத்தை இடிக்க வேண்டும் என கூறவில்லை.. கிளி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு.
சங்குப்பிட்டியில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தை இடிக்குமாறு பூநகரி பிரதேச செயலாளருக்கு தான் அழுத்தம் கொடுக்கவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு பூநகரி பிரதேச செயலாளருக்கு கிளிநொச்சி மாவட்ட உயர் அதிகாரி ஒருவரால் அழுத்தம் வழங்கப்பட்டு வருவதாக வெளியாகிய செய்தி தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சங்குப்பிட்டியில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் குறித்த இடத்தில் இருந்தது என்றால் முறைப்படி அனுமதி எடுத்து அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
குறித் ஆலயம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு கடிதம் எதுவும் நான் அனுப்பவில்லை குறித்த ஆலயம் முறைப்படி அமைக்கப்பட்டதா? என ஆராயுமாறு கோரியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்





.jpeg)














