கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பகுதியில் புதைக்கப்பட்ட ஆர்பிஜி குண்டு நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் ...
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பகுதியில் புதைக்கப்பட்ட ஆர்பிஜி குண்டு நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மட்டுவில் ஜே 311 கிராம சேவையாளர் பிரிவுக்குடபட்ட பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றை துப்பரவு செய்ய முயன்றபோது பழைய காலத்திற்கு உட்பட்ட ஆர்பிஜி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமப் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.