இலங்கை சாரணர் சங்கத்தால் பேடன்பவல் தினத்தை முன்னிட்டு 100,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் முதற்கட்டமாக 22.02.2021 ஆரம்பிக்கப்பட்டது. இரண்...
இலங்கை சாரணர் சங்கத்தால் பேடன்பவல் தினத்தை முன்னிட்டு 100,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் முதற்கட்டமாக 22.02.2021 ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 05.06.2021 தொடக்கம் 30.01.2021 வரை மரநடுகை செயற்றிட்டம் இடம்பெற்று வருகாறது.
அதற்கமைவாக தற்போதைய கோவிட் 19 சூழலை கருத்திற்கொண்டு zoom செயலியினூடாக 1000 மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டம் நேற்றைய தினம் காங்கேசன்துறை மாவட்ட சாரணர் கிளைச்சங்கத்தால் மாவட்ட எல்லைக்குட்டபட்ட பாடசாலை சாரணர்களுக்கு வழங்கபட்டது.சாரணர்கள் தங்களுடைய இல்லங்களில் பெற்றோருடன் இணைந்து மரங்களை நாட்டினர்.
இந்நிகழ்வில் கங்கேசன்துறை மாவட்ட சாரணர் கிளைச்சங்கதின் தலைவர் திரு சிவசிறீ தெல்லிப்பழை பிரதேச செயலாளர், காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் திரு ஜெயபவன், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள்,கிளைச்சங்க உத்தியோகத்தர்கள், சாரணர்கள் ,திரிசாரணர்கள் ,குருளைசாரணர்கள் கலந்துகொண்டார்கள்.இச்செயற்றிட்டத்திற்கு புலம்பெயர் மகாஜன கல்லூரி சாரணர்கள் நிதிப்பங்களிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது