யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர். வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆத...
வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவர் இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
மூவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்படவுள்ளன.