பயணத் தடை காலப்பகுதியில் அனுமதிபெற்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களில் கையூட்டுப் பெற்ற கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அலுவ...
பயணத் தடை காலப்பகுதியில் அனுமதிபெற்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களில் கையூட்டுப் பெற்ற கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அலுவலகர் உள்பட இருவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பதவி நிலை பொலிஸ் அலுவலகருக்கு நெடுந்தீவு பொலிஸ் பிரிவுக்கும் அவரின் கீழ் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் பயணத் தடைக் காலப்பகுதியில் அனுமதி பெற்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வரை கையூட்டு பெற்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையை அடுத்து இருவருக்கும் தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.