யாழ் நகரில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி விபத்து! நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித...
யாழ் நகரில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி விபத்து!
நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து நிலை காணப்படுகின்றது.
 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் அத்தியாவசிய தேவை நிமித்தம் யாழ்  நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியது 
குறித்த விபத்துச் சம்பவம் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்றுள்ளது .
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும்  காயம் அடைந்துள்ளதோடு முச்சக்கர வண்டியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது
 விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
