இலங்கையில் அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அ...
இலங்கையில் அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 450 கிராம் பாணின் விலை 78 மற்றும் 83 ரூபாயாக அதிகரிக்கும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.