கொரோனா என்பது ஆபத்தான நோய் அல்லவெனவும் அது சாதாரண காய்ச்சலே என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித...
கொரோனா என்பது ஆபத்தான நோய் அல்லவெனவும் அது சாதாரண காய்ச்சலே என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களில் 81 சதவீதமானவர்கள் எவ்விதமான சிரமங்களும் இன்றி பூரண குணமடைவதாகவும், 14 சதவீதமானவர்கள் மட்டுமே காய்ச்சல், இருமல் போன்றவற்றால் சிறிது சிரமத்திற்கு உள்ளாகி பின்னர் குணமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் கொரோனா மரணமானது இன்னும் 1.9ஆகவே காணப்படுவதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.