நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கொழும்பு மாவட்டத்தில் இரண்டு கொவிட் தடுப்பூசி மருந்தளவுகளையும் (DOSE) பெற்றுக...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கொழும்பு மாவட்டத்தில் இரண்டு கொவிட் தடுப்பூசி மருந்தளவுகளையும் (DOSE) பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே, நடமாடும் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகிப்பதற்காக மீகொட, நாராஹேன்பிட்டி, இரத்மலானை மற்றும் போகுந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டம் முழுவதுமாக 12,294 நடமாடும் வர்த்தகர்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், 1,489 மொத்த வியாபார நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு, திறந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.