கையடக்க தொலைபேசியில் டிக் டாக் செயலியில் வாளுடன் நின்ற நபரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்தனர். இச...
கையடக்க தொலைபேசியில் டிக் டாக் செயலியில் வாளுடன் நின்ற நபரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தனது கையடக்கத் தொலைபேசியில் வாளுடன் டிக் டாக் செய்தார் எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உடுவில் பகுதியில் வைத்து யாழ் குற்றத்தடுப்புப் பொலிஸார் குறித்த நபர் கைது செய்த நிலையில் அவரிடமிருந்த வாழும் கைப்பற்றப்பட்டது.
குறித்த நபர் சங்கானை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்த நிலையில் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்தது.