சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி இன்று ...
சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி பாதிக்கப்பட்டது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.