இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய சர்வதேச சந்தையில் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய சர்வதேச சந்தையில் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடி கடனாக பெற எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட ‘Concept Global’ என்ற நிதி நிறுவனத்திடமிருந்து இக் கடனைப் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
3 சதவீத வட்டி விகிதத்தில் இந்த கடன் விரைவில் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.