யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கைதடி ம...
யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 
கைதடி முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் சுமார் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. 
இந்நிலையில் இல்லத்தில் உள்ள மேலும் சிலருக்கு தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் இன்ற மீளவும் நடத்தப்பட்ட பரிசோதனையில், 
68 முதியவர்களுக்கும், 4 ஊழியர்களுக்குமாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
