பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல் போன நான்கு பிள்ளைகளின் 82 வயது தாயொருவரின் பராமரிப்பு செலவுகளை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் ஏற்றுக்கொண்டுள்ளா...
பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல் போன நான்கு பிள்ளைகளின் 82 வயது தாயொருவரின் பராமரிப்பு செலவுகளை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவரை இனங்கண்ட சுகாதார உத்தியோகத்தர், அவரை பிள்ளைகளிடம் சேர்க்க முயற்சி செய்தார். எனினும், தமது பொருளாதார நிலைமையில் தாயாரை பொறுப்பேற்க முடியாதென பிள்ளைகள் மறுத்து விட்டனர்.
கிராம சேவகர், பிரதேச செயலாளர் ஊடாக முயற்சி செய்தும் பலனில்லாத நிலையில், தியாகி நிறுவனரிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், கோப்பாயிலுள்ள காப்பகத்தில் அந்த தாயாரை அனுமதித்துள்ளார். மாதம் மாதம் ரூபா 60000 கட்டணம் அறிவிடும் அந்த காப்பகத்தில், அதற்கான செலவை பொறுப்பேற்றுள்ளார்.
2ம் இணைப்பு :
"லில்லிகோம்"தனியார் காப்பகத்திடம் மாதம் அறுபதினாயிரமும் மூன்று இலட்சம் முற்பணம் செலுத்தி தானே அவரை அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்து அவருக்கு தேவையான முழு செலவுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்உடன் தியாகி இன் இணைப்பாளர் கருணாகரன் கலந்துகொண்டனர்..