கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கிய நிலையில் வலதுகை மற்றும் வலது கால் சிதைந்த நிலையில் அதனை வெற்றிகரமாக சத்திரசிகி...
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கிய நிலையில் வலதுகை மற்றும் வலது கால் சிதைந்த நிலையில் அதனை வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சகிச்சை நிபுணர் வைத்தியர் இளம் செழிய பல்லவன் இணைத்துள்ளார்.
பருத்தித்துறையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மன்னாரைச் சேர்ந்த மீனவன் தவறுதலாக கடலில் விழுந்த நிலையில் அவனது வலது கை வலது கால் வள்ளத்தின் காற்றாடியின் சிக்குண்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிதைந்தது.
இன் நிலையில் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் தலைமையிலான குழுவினர் அதனை வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் இணைத்துள்ளார்.
குறித்த சத்திர சிகிச்சையானது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமார் 5 மணித்தியாலங்கள் இடம் பெற்று வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.