தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது.. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு...

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது.. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு...

தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடியவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை ஐநாவில் காட்டிக் கொடுத்து விட்டது என தமிழ் தேசிய மக்கள்...

தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடியவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை ஐநாவில் காட்டிக் கொடுத்து விட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக்கட்சி ஐநாவுக்கு ஒரு வரவு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த வரைவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த போர்க் குற்றம் தொடர்பில் விசாரணையை கோருவதாக அறியக்கிடைத்தது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தனது படைகள் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தெரிவித்து வருகிறது.


இறுதி யுத்தத்தில் அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐநாவுக்கு அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசைப் பாரப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.

இவ்வாறான ஒரு நிலையில் சர்வதேச விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள்  காத்திருக்கும் நிலையில் மக்களுக்காகப் போராடியவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோருகிறது.

கடந்த மார்ச் மாத ஐநா அமர்விலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை காப்பாற்றிய நிலையில் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தனது இனத்துக்காக போராடியவர்களை அதே இனத்துக்காக போராடுபவர்கள் காட்டிக் கொடுத்த வரலாறு எம் மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.   

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் ஒவ்வொரு ஐநா அமர்வுக்கு ஒரு மாதத்துக்கு  முன்னர் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு எனப் பேச ஆரம்பித்துவிடுகிறார்.

அவர் இவ்வாறு பேசுவது யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காத்தான்  பேசுகிறார் என நான் நினைக்கிறேன்.

ஆகவே தமிழ் மக்கள் எமது இனத்தை காட்டிக் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை  அரசியல் பரப்பில் இருந்து  அகற்றுவதே எமது இனத்துக்கு விடிவைத் தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3321,lanka,8611,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4214,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது.. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு...
தமிழ் மக்களுக்காக போராடியவர்களை கூட்டமைப்பு காட்டிக் கொடுத்துவிட்டது.. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் குற்றச்சாட்டு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT-s3tKuPxxTEdT1XH9XXhjiUYGi_Jsptu8N_JxpVCwMB3wXTeStgGyuuZdkRnIb-n5ADbQ_OsmieI8R2MiVYA0ELy1X-qpAjdA1D7r-khpA0QEXGdKPr8VqrKxAKSeQr0tOoBxkPlP-k/w640-h480/IMG-20210905-WA0019.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT-s3tKuPxxTEdT1XH9XXhjiUYGi_Jsptu8N_JxpVCwMB3wXTeStgGyuuZdkRnIb-n5ADbQ_OsmieI8R2MiVYA0ELy1X-qpAjdA1D7r-khpA0QEXGdKPr8VqrKxAKSeQr0tOoBxkPlP-k/s72-w640-c-h480/IMG-20210905-WA0019.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/09/blog-post_6.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/09/blog-post_6.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content