க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை இவ்வருடத்தில் நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை இவ்வருடத்தில் நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு பரீட்சைகளுக்காக மாத்திரம் சுமார் 8 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர். எனினும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக விண்ணப்பங்கள் முறையாக நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக 8 இலட்சம் மாணவர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவுசெய்ய முடியாமலும் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாலும் இந்த இரு பரீட்சைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.