அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவான பூஸ்டரை செலுத்திக்கொண்டுள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளை க...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவான பூஸ்டரை செலுத்திக்கொண்டுள்ளார்.
65 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவாக பைசர் தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டு சுகாதார பிரிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஒரே வழி என பூஸ்டர் மருந்தளவை செலுத்திக்கொண்டதன் பின்னர், ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
78 வயதாகும் ஜோ பைடன், கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி தனது கொவிட் முதலாவது மருந்தளவையும், ஜனவரி 11ம் திகதி இரண்டாவது மருந்தளவையும் பெற்றுக்கொண்டார்.